Kanyakumari Parotta Death: பரோட்டாவை பிடிக்காதவர்கள் மக்கள் தொகை எண்ணிக்கையில் மிக மிக குறைவு எனலாம். தமிழ்நாடு என்றில்லாமல் கேரளாவிலும் பரோட்டா மீதான விருப்பம் மக்களுக்கு அதிகம் இருக்கும். சைவம், அசைவம் என இரு உணவுப் பிரியர்களுக்கும் பரோட்டா பிடித்ததுதான். இருப்பினும், மைதாவால் செய்யப்படும் பரோட்டா மீது தற்போது பலருக்கும் சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைதாவால் முழுமையாக செய்யப்படும் பரோட்டாவை தவிர்ப்பது உடல்நலனுக்கு நல்லது என மருத்துவ நிபுணர்கள் சொல்வதால் பரோட்டாவை மிக மிக அரிதாக உண்ணவே மக்கள் நினைக்கின்றனர். இருப்பினும், கோதுமை பரோட்டா மூலம் உடலுக்கு ஆரோக்கியமாகவும், ருசியாகவும் சாப்பிட மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், தற்போது பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.


பரோட்டா வாங்கிய தொழிலாளி


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சென்று சாங்கை பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் சனந்தனன் (40). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர்.


மேலும் படிக்க | பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்


கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்ற நிலையில், இவர் தனது தாயார் மேரிபாய் (70) என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மே 30) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து பரோட்டா வாங்கி வந்துள்ளார்.


துயர சம்பவம்


அந்தப் பரோட்டாவை வீட்டின் படியில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென விக்கல் எடுத்து சாப்பிட முடியாமல் திணறியுள்ளார். அப்போது தன் தாயாரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தாயார் கொடுத்த தண்ணியை வாங்கி குடித்த நிலையில் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 


மருத்துவர்கள் கூறுவது என்ன?


அப்போது மருத்துவர்கள் அவரை பார்த்து பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், விக்கல் எடுத்து உயிரிழப்பதன் பின்னணி குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கூறுவதாவது, "சாப்பிடும் போது அந்த உணவு, உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும். அந்த உணவுத் துகள்கள் மூச்சுக்குழாயில் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகும். 


மிகவும் அரிதாக அதுபோன்ற சம்பவம் நடக்கும். அதாவது, உணவு உண்ணும் போது விக்கல் போன்ற திடீர் அடைப்பு ஏற்பட்டால், உணவு சுவாசக் குழாயில் நுழையலாம். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் கூட ஒருவர் உயிரிழக்கலாம்" என கூறப்படுகிறது. இருப்பினும், சனந்தனன் உயிரிழந்ததற்கான காரணம் பரோட்டா தானா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவருக்கு ஏற்பட்ட விக்கல் காரணமாக கூட அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு அவரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனலாம்.


மேலும் படிக்க | சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்த திருவண்ணாமலை வேன் டிரைவருக்கு குவியும் பாராட்டுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ