திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?
MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இந்தியாவையே தற்போது திரும்பிப்பார்க்க வைத்துள்ளது எனலாம். 2014ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி வந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருந்த கர்நாடகாவில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிகிறது. ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ் கட்சி மூன்றாவது கட்சியாக உள்ள நிலையில், கிங் மேக்கராகவோ, கிங்காகவோ அவர்கள் உருவெடுக்கவில்லை எனலாம்.
ஆட்சியமைக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பெரும் கொண்டாட்டம் நீடிக்கும் நிலையில், பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காங்கிரஸ் வெற்றியை அடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார், சித்தராமையா ஆகியோர் முதலமைச்சர் போட்டியில் உள்ளனர்.
மேலும் படிக்க | கர்நாடகாவை ‘கை’ப்பற்றும் காங்கிரஸ்... வெற்றி பெற உதவிய உத்திகள் இவை தான்!
எதிர்க்கட்சிகளுக்கு புத்துணர்ச்சி
காங்கிரஸின் வெற்றி பாஜகவுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான அணிகளுக்கு இது புத்துணர்ச்சி அளிக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் ஓரணியாக இணைவதற்கு, இந்த வெற்றி பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு இந்த தோல்வி கூடுதல் அழுத்தத்தை வரவழைக்கும் என கூறப்படுகிறது.
கன்னடிகப் பெருமிதம்
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
திராவிட நிலப்பரப்பில்...
பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் ட்வீட்
இந்த குறப்பிடத்தக்க வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். காந்தியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்துவிட்டீர்கள். அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். துணிச்சலோ, பதற்றம் இல்லாமலோ உங்களது நம்பகமான அணுகுமுறை மக்களுக்கு புதிய காற்றை சுவாசிக்க வழிவகுத்துள்ளது.
பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்..
மேலும் படிக்க | வெற்றி தோல்வி என்பது பாஜகவுக்கு புதிதல்ல! விரைவில் மீண்டு வருவோம்: பசவராஜ் பொம்மை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ