பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்கியதாகவும்,அதில் 50 லட்சம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததாகவும் புகார் எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் 8:30 மணிமுதல் தனது சோதனையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீட்டின் வெளி வளாக பகுதிகள் முழுவதையும் சோதனை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை


இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | கியான்வாபி சர்ச்சை: வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக -அகிலேஷ் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!