கியான்வாபி சர்ச்சை: வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக -அகிலேஷ் குற்றச்சாட்டு

Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 17, 2022, 07:43 PM IST
கியான்வாபி சர்ச்சை: வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக -அகிலேஷ் குற்றச்சாட்டு  title=

Akhilesh Yadav on Gyanvapi Mosque: கியான்வாபி மசூதி கணக்கெடுப்பு தொடர்பான கள ஆய்வு சர்ச்சையை அடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் சூடுபிடுத்துள்ளது.  AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி போன்ற தலைவர்கள் ஏற்கனவே இந்து அமைப்பு தரப்பின் கூற்றை நிராகரித்துள்ளனர். தற்போது இந்த சர்ச்சை விவகாரத்தைக் குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற பிரச்னைகள் மோடி அரசு எழுப்புகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவிடம் வெறுப்பு கடிகாரம் உள்ளது-அகிலேஷ் யாதவ்:
கியான்வாபி போன்ற பிரச்சனைகளை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேண்டுமென்றே எழுப்புகின்றன என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இன்று நாட்டில் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன, பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.

'ஒரே நாடு, ஒரே தொழிலதிபர்' என்ற கொள்கையுடன் பாஜக செயல்படுகிறது:
தனியார்மயம் குறித்த கேள்விகளை எழுப்பிய அகிலேஷ், இன்று நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகின்றன என்றார். 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' என்ற முழக்கம் செய்த பாஜக, தற்போது 'ஒரே நாடு, ஒரே தொழிலதிபர்' என்ற கொள்கையின்படி செயல்படுவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். கியான்வாபி விவகாரம் குறித்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் "இது அரசியல் ஆதாயத்திற்காக பாஜக செய்வதாக" விமர்சித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

நீதிமன்ற ஆணையரை பதவி நீக்கம் செய்தது நீதிமன்றம்:
கியான்வாபி கணக்கெடுப்பு தொடர்பான விசாரணை வாரணாசி நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்பொழுது நடந்த விசாரணையின் போது, இந்த ஆய்வு குறித்த ​​தகவல் கசிந்ததாகக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட நீதிமன்ற ஆணையரை பதவி நீக்கம் செய்தது நீதிமன்றம். மேலும் மீதமுள்ள இரு ஆணையர்களும் அடுத்த 2 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கியான்வாபி மசூதி விவகாரத்தில் முஸ்லிம் தரப்புக்கு பின்னடைவு:
கியான்வாபி மசூதியில் தொழுகைக்கு செல்பவர்கள், தொழுகைக்கு முன்பு முகம், கை கால்களை கழுவிக்கொள்ளுவார்கள். அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் இடத்தில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த பகுதியை சீலிட்டு மூட மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ்ஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மசூதியில் தொழுகை நடத்துவதை யாரும் தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரத்தில் வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதை அடுத்து முஸ்லிம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மே 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா...பாஜகவை விமர்சித்த ராகுல்காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News