திமுக தலைவர் கருணாநிதிக்கு 6வது நாளாக காவேரி மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. 


இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 


குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.


இந்நிலையில் கல்லீரல் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், முதுமையை கருத்தில் கொண்டும், கருணாநிதி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சில நாட்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, தற்போது அவர் 6வது நாளாக இன்றும் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.