மருத்துவமனையில் 30 நிமிடம் சக்கர நாற்காலியில் அமர்ந்த கருணாநிதி!
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்!!
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்!!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்ட சிகிச்சையாக மருத்துவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். இதையடுத்து, கருணாநிதியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.