Verdict In Murder Case: கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளரான ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த வழக்கு நடைபெற்றபோது நீதிமன்ற வளாகத்துக்குள் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பசுபதி அருகே உள்ள கருப்பத்தூர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரும் ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த 2021 அக். 6ம் தேதி அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்தனர். 


ரவுடி கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் துறையின் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிடிஆர் கொடுத்த பெரிய அப்டேட்... ஐடி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருது..!


பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் விவசாயம் செய்து வந்தார்.


2021-ம் ஆண்டு ஆகஸ்டு 06 ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாயத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 


இந்த சம்பவம் குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது. கொலை வழக்குத் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.


கொலைக்கு உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா சரவணன்,சுந்தர், ரவிவர்மா என்கின்ற பாம் ரவி, குமுளி ராஜ்குமார்,கருப்பு ரவி,மனோஜ், கார்த்தி,ஜெயராமன் சுரேஷ்,நந்தகுமார், கருப்பு குமார் ஆகிய 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மேலும் படிக்க | 'தமிழக சபாநாயகர் ஒரு மகா சில்லறை...' அப்பாவுவை அநாகரீகமாக விமர்சித்த பாஜக துணைத்தலைவர்


கருப்பு ரவி தவிர, மேலும் பத்து நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.15) மதியம் 1மணியளவில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். 


கருப்பத்தூர் கோபால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா,சரவணன், சுந்தர்,ரவி என்கிற பாம் ரவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


இவர்களைத் தவிர எஞ்சிய நான்கு நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ