பிடிஆர் கொடுத்த பெரிய அப்டேட்... ஐடி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருது..!

PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசும்போது, இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியேறுகிறார்கள், பெங்களூர், ஐதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருகின்றன என்றும் கூறினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2024, 12:15 PM IST
  • தமிழ்நாட்டுக்கு ஐடி நிறுவனங்கள் வருகிறது
  • மதுரை, கோவையில் நிறுவன திட்டமிட்டுள்ளன
  • அமைச்சர் பிடிஆர் சட்டப்பேரவையில் தகவல்
பிடிஆர் கொடுத்த பெரிய அப்டேட்... ஐடி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருது..! title=

இன்றைய சட்டப்பேரவியின் வினாக்கள் விடை நேரத்தில் காரமடை நகராட்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முன்வருமா? என்று சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், " கோவை விளாங்குறிச்சியில் 61.59 ஏக்கர் 107 கோடி முதலீட்டில் எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி உள்ளது. அதேபோல, 3524 சதுர அடியில் அங்கு நிர்வாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அங்கு குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் படிக்க | கந்துவட்டி கொடுமை... கடனாளியை இருட்டு அறையில் அடைத்து கொடுமை - அதுவும் 2 மாசமாக!

அவற்றில் 16, 809 பணியாளர்களுடன் அங்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில் 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. எனவே காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப அமைக்க வேண்டிய தேவையில்லை. வேலைவாய்ப்பை அதிகம் தரும் துறை ஐடி துறைதான். ஆண்டுதோறும் சராசரியாக 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக கட்டடம் கட்டுவார்கள். ஆனால் கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டட்டம் கட்டினர். எனவே அவற்றை திறக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு 2.5 லட்சம் சதுர அடியில் கோவையில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டால் பல புதிய வேலை வாய்ப்பு கோவை பகுதியில் கிடைக்கும் என்றார். மேலும், வெள்ளம் , பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியில் அதிக நிறுவனங்கள் இல்லாமல் மற்ற பகுதியில் புதிய நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. மனித வளம் தான் தமிழகத்தின் முக்கிய சக்தி.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் பட்டித்து வெளியேறுகிறார்கள். பெங்களூர், ஐதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருகின்றன. வரும் 23,24 ம் தேதி தமிழகத்தில் ஐடி மாநாடு நடைபெற உள்ளது. அதில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆந்திர போலீஸை காரை ஏற்றி கொலை செய்த செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவன் சரண்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News