சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறும்?

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்  ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

1 /5

சென்னை நகரில், ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

2 /5

சென்னை தீவுத் திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்குகள்  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கார் பந்தயம் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.  

3 /5

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

4 /5

மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.  

5 /5

இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் பிப்ரவரி 16ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.