கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா நடைபெற்ற நிலையில், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி, பால்குடம், தீர்த்த குடம், குழந்தை கரும்புத் தொட்டில் கட்டி கொண்டு வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை  செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நேற்று இரவு தொடங்கிய பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. குறிப்பாக வெங்கமேடு, என்.எஸ்.கே.நகர், பாலாமபுரம், நீலிமேடு ஆகிய பகுதிகள் இருந்து ஏராளமானோர் (பள்ளர்) சார்பாக மாவிளக்கை எடுத்து வந்து மாரியம்மனுக்கு படைத்தனர். ஆட்டம், பாட்டத்துடன் நடைபெற்ற இந்த பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். 



மேலும் படிக்க | ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்!


இன்று நடைபெற்ற பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம் வேடமடைந்து மாவிளக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த மாவிளக்கு நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியோர்கள் வரை தங்களது வயதையும் பொறுப்பெடுத்தாமல் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.



திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் படிக்க | சேலத்தில் 50க்கும் மேற்பட்ட நர்ஸிங் மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு... மூடப்பட்ட சமையல் கூடம் - முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ