பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!
கரூரில் தங்கையின் தோழியை பைக்கில் அழைத்து சென்ற விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தடுக்க சென்ற இளைஞர் உருட்டுக்கட்டையால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அப்பாவி இளைஞரின் உயிரை காவு வாங்கிய கதை இது...
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிகுறிச்சியைச் சேர்ந்தவர் 19 வயதான மணிகண்டன். கடந்த வாரம் இவரது ஊரில் கோயிலில் திருவிழா நடந்ததுள்ளது. திருவிழாவை காண, மணிகண்டனின் தங்கை உடன் படிக்கும் தோழி ஒருவர் அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். பிறகு திருவிழா முடிந்து அப்பெண்ணை, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற மணிகண்டன் பெண்ணின் ஊரான ராஜபுரத்தில் பத்திரமாக விட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த அதே ஊரைச் சேர்ந்த மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய மூவரும் எங்கள் ஊர் பெண்ணை, நீ எப்படி பைக்கில் ஏற்றலாம் என கூறி கடுமையாக கண்டித்துள்ளனர்.
பதிலுக்கு மணிகண்டனும் எச்சரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் பின்னர், ராஜபுரத்தைச் சேர்ந்த மதன் தனது செல்போனில் தொடர்புகொண்டு மணிகண்டனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால், மணிகண்டன் தனது நண்பர் சூர்யாவிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். நண்பனை திட்டியவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சூர்யாவும் பதிலுக்கு எச்சரிக்கை விட பிரச்சினை பெரிதானது. இரு தரப்பினரும் மாறி மாறி செல்போனில் வாய்த்தகராறில் ஈடுபட ஒரு கட்டத்தில் ‘நேரில் வாங்கடா பாப்போம்’ என மோதலுக்கு தயாரானார்கள்.
மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்னதாரபுரத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது போகும் வழியில் நின்றிருந்த சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். தனி ஆளாக சிக்கிய சூர்யா அடி தாங்க முடியாமல் வலியால் கதறி துடித்துள்ளார். அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த அரவிந்த் என்ற இளைஞர் சம்பவத்தை தடுத்துள்ளார். அதில், சூர்யா தனது உயிரை காப்பாற்றி கொண்டு தப்பியோட, கொலை வெறியிலிருந்த 3 பேரும் அரவிந்த் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்க, தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த அரவிந்த் அங்கேயே சுருண்டு விழுந்திருக்கிறார், அதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அரவிந்த்தை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலை சோதனை செய்ய மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். வரும் வழியிலேயே அரவிந்த் பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார்.
இதற்கிடையே, தாக்குதலுக்குள்ளான சூர்யாவையும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அரவிந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய மூன்று பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இரு தரப்பினருக்கு இடையேயான மோதலை விலக்கி விட சென்ற இளைஞர், உருட்டுக்கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ - பள்ளி மாணவியை கடத்திய வாத்தியார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR