கீரனூர் பெண் இன்ஸ்பெக்டருக்கு உள்துறை அமைச்சக விருது: தமிழகத்தின் பெருமை எம்.கவிதா!!
மிகச் சிறந்த முறையில் விசாரணைப் பணிகளில் ஈடுபட்டதற்கான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் Medal for Excellence in Investigation விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி: 2020 ஆம் ஆண்டு மிகச் சிறந்த முறையில் விசாரணைப் பணிகளில் ஈடுபட்டதற்கான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் Medal for Excellence in Investigation விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 121 காவல் துறை பணியாளர்கள் இந்த விருதைப் பெறுகிறார்கள். இதில் கீரனூர் அனைத்து பெண் காவல் நிலைய (AWPS) இன்ஸ்பெக்டர் எம்.கவிதாவும் தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.
மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும், நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படும் போலீசாரை சில பிரிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 121 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
42 வயதான கவிதா, புதுக்கோட்டை மாவட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு 11 வயது சிறுவனின் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை விசாரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, அவருக்கு தனக்குக் கிடைத்த விருதைப் பற்றி தெரிய வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 35 வயதுடைய நபருக்கு உரிய தண்டனையை பெற்றுத் தெருவேன் என்று அவர் கூறினார்.
பின்னர், இன்ஸ்பெக்டர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: சென்னையில் ரூ .1.65 கோடி மதிப்புள்ள போதை மருந்து கைப்பற்றிய அதிகாரிகள்
கவிதா கடந்த 4 ஆண்டுகளில் 11 குற்றவாளிகளை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.
கிரேட்-2 கான்ஸ்டெபிலாக பணிக்குச் சேர்ந்த கவிதா 2016-ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டரானார். இவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் போக்ஸோ (POCSO) சட்டம் தொடர்பாகத் தொடர்ந்து பிரச்சாரங்களை செய்து வருகிறார்.
2 வழக்குகள் தொடர்பாக இவர் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை கிடைத்தது.
குற்றப் பிரிவு விசாரணையில் திறமையான போலீஸ் பணியாளர்களை அங்கீகரித்து ஊகுவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.