Kerala Lottery Result Tamil: ஓணம் பம்பர் கேரளா லாட்டரியான பிஆர் 93 இன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில லாட்டரி இயக்குநரகம் இன்று ஓணம் திருவோணம் பம்பர் BR-93க்கான கேரள லாட்டரி முடிவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த keralalotteryresult.net மூலம் நேரலை முடிவுகளை பார்த்து பலர் தெரிந்து கொண்டனர். இதையடுத்து, அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் பிற்பகல் 2 மணிக்கு யார் வெற்றியாளர் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முழு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணியடுத்து, மேற்கூறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாட்டரி முடிவுகள் PDF வடிவில் பதிவேற்றப்பட்டது. 


மேலும் படிக்க | Kerala Lottery Result: திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியானது! முதல் பரிசு ரூ 25 கோடி


கேரள லாட்டரியை வென்ற தமிழர்..! 


கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த, நடராஜன் என்பவருக்கு, கேரள லாட்டரி திருவோணம் பம்பர் முதல் பரிசு கிடைத்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாரில் நடராஜன், லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய TE230662 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. முதல் பரிசை வென்றுள்ள நடராஜன், மொத்தம் 10 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். இதை வாங்குவதற்கு அவருக்கு 5,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார். 25 கோடி ரூபாயில் 30 சதவிகிதம் வருமான வரி போக, நடராஜனுக்கு கையில் 17.5 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. 


லட்டரி டிக்கெட்டுகள்:


இந்த வருடம், ஓணம் லாட்டரி , ஒரு டிக்கெட்டிற்கு 500 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், முதல் பரிசு 15 கோடி இருந்தது. இந்த வருடம் இதன் தொகை உயர்த்தப்பட்டு 25 கோடி ரூபாயாக மாறியது. கடந்த வருடம் சுமார் 66 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்றன. இந்த வருடம் லாட்டரி டிக்கெட்டுகளின் விற்பனை அதிகரித்து சுமார் 67 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | “ஒன்பதரை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்து உள்ளார்?” உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ