Kerala Lottery Result: திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியானது! முதல் பரிசு ரூ 25 கோடி

Kerala Lottery Onam Bumper Result Out: இன்று (20 செப்டம்பர் 2023, புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கேரளா லாட்டரி திருவோணம் பம்பர் முடிவுகள் வெளியிடப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 20, 2023, 03:43 PM IST
  • திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் keralalotteryresult.net மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
  • கேரள திருவோணம் பம்பர் லாட்டரி 2023-ன் முதல் பரிசு ரூ.25 கோடி.
  • கேரளா லாட்டரி ஓணம் குலுக்கல் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெறும்.
Kerala Lottery Result: திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியானது! முதல் பரிசு ரூ 25 கோடி title=

Kerala Lottery Result: இன்று ஓணம் பம்பர் கேரளா லாட்டரியான பிஆர் 93 இன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதாவது கேரள மாநில லாட்டரி இயக்குநரகம் இன்று ஓணம் திருவோணம் பம்பர் BR-93க்கான கேரள லாட்டரி முடிவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த keralalotteryresult.net மூலம் நேரலை முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் பிற்பகல் 2 மணி முதல் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஓணம் பம்பர் லாட்டரியின் முழு முடிவுகளும் மாலை 3 மணிக்குப் பிறகு அறிவிக்கப்படும். பின்னர் மாலை 4 மணி முதல், மேற்கூறிய இணையதளத்தில் லாட்டரி முடிவுகள் PDF வடிவில் பதிவேற்றப்படும். 

ஓணம் பம்பர் லாட்டரி முடிவை எவ்வாறு தெரிந்துக்கொள்ளலாம்?
படி 1: கேரள மாநில லாட்டரிகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteries.com அல்லது statelottery.kerala.gov.in ஐப் பார்வையிடவும்.
படி 2: ரிசல்ட் வியூ-ஐ கிளிக் செய்யவும்.
படி 3: அங்கெ கீழ்தோன்றும் மெனுவில் உள்ள முடிவைக் கிளிக் செய்யவும்.
படி 4: லாட்டரியின் பெயராக "ஓணம் பம்பர் லாட்டரி"யை தேர்வு சேது செய்து, அடுத்து தேதி "செப்டம்பர் 20, 2023" எனத் தேர்ந்தெடுத்து, பார்வை (SEE) என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: கேரளா ஓணம் பம்பர் லாட்டரியின் முடிவு PDF வடிவத்தில் திறக்கப்படும்.
படி 6: வெற்றியாளர்களின் லாட்டரி எண்கள், வென்ற தொகை மற்றும் பிற முக்கிய விவரங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
படி 7: எதிர்கால தேவைக்காக லாட்டரி PDF முடிவு நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மாதம் ஐந்தரை லட்சம் ரூபாய்! இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்

ஓணம் பம்பர் லாட்டரி பரிசை எவ்வாறு பெறுவது?
பரிசு வென்றவர்கள், கேரள அரசிதழில் வெளியிடப்பட்ட ஓணம் பம்பர் 2023 முடிவுகளைச் சரிபார்த்து, வெற்றி பெற்ற டிக்கெட்டை டிரா நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

லாட்டரி பரிசை பெற ஏதாவது விதிகள் உண்டா?
பரிசுத் தொகை 5,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வெற்றியாளர்கள் கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடையிலும் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். பரிசுத் தொகை ரூ. 5,000க்கு மேல் இருந்தால், வெற்றியாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை வங்கி அல்லது அரசு லாட்டரி அலுவலகத்தில் அடையாளச் சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓணம் பம்பர் லாட்டரி 2023க்கான பரிசுத்தொகை எவ்வளவு?
கேரள திருவோணம் பம்பர் லாட்டரி 2023-ன் முதல் பரிசு ரூ.25 கோடி. இரண்டாம் பரிசு ரூ.1 கோடியும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமாகும். அடுத்தடுத்து பரிசுத் தொகை எவ்வளவு அறிந்துக்கொள்ளுங்கள்.

முதல் பரிசு: ரூ 25 கோடி

2வது பரிசு: ரூ.1 கோடி

3வது பரிசு: ரூ 50 லட்சம்

4வது பரிசு: ரூ 5 லட்சம்

5வது பரிசு: ரூ 2 லட்சம்

6வது பரிசு: ரூ.5,000

7வது பரிசு: ரூ.2,000

8வது பரிசு: ரூ.1,000

9வது பரிசு: ரூ 500

ஆறுதல் பரிசு: ரூ. 5 லட்சம்.

மேலும் படிக்க - தலைதூக்கும் ஒரு நம்பர் லாட்டரி, கல்லா கட்டும் மாபியா கும்பல்! கண்டுகொள்ளாத போலீஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News