புதுவை MLA-களை பேரவையில் அனுமதிக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கிரண்பேடி அதிரடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் பா.ஜ.க-வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ-க்களாக கடந்த ஆண்டு ஜீன் மாதம் மத்திய அரசு நியமித்தது. முறையான அறிவிப்பு இல்லாததால் சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. இதனால் ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு ஜீலை மாதம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 3 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ-கள் 3 பேரும் பேரவையில் இருக்கை வசதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க கோரி சபாநாயகரிடமும், சட்டப்பேரவை செயலரிடமும் மனு அளித்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை எந்தவொரு அனுமதியும் தரவில்லை எனத் தெரிகிறது. 


இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ-களை நிர்ணயித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த பிரச்னையில் தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இணையம் மூலம் நியமன எம்.எல்.ஏக்களை பேரவையில் அனுமதிக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.