சமையலறை உதவிக்குறிப்புகள் : வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் உள்ளிட்ட பல காய்கறிகளை வெட்டிய பிறகு சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால், அது கருத்து விடும். அதன் சுவையும் கெட்டு விடும். இத்தகைய சூழ்நிலையில், இந்த காய்கறிகள், பழங்கள் கருத்து போகாமல் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம். இவை அனைத்தும் கருத்து போகாமல் பிரெஷ்ஷாக இருக்க சில எளியை வழிகளை பின்பற்றினால் போதும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை சாறு- காய்கறிகளை நறுக்கிய பின்னும் பிரெஷ்ஹாக இருக்க, அல்லது கருக்காமல், நிறம் மாறாமல் இருக்க  எலுமிச்சை சாறு சிறந்த வழியாகும். காய்கறியை வெட்டிய பின், தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு கரைசலில் வைத்தால்.  காய்கறிகள் கருத்து போகாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.


ALSO READ | Cryptic Pregnancy: குழந்தை பிறக்கும் வரை தான் கர்ப்பம் என்றே அறியாத பெண்


வினிகர்- வினிகரின் உதவியுடன் காய்கறிகளை கருத்து போவதிலிருந்து காப்பாற்றலாம். இதற்காக, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை கலந்து கலக்கவும்.  வாழைப்பழம், கத்திரிக்காய் போன்றவற்றை நிறுக்கிய உடன், காய்கறியை இந்த வினிகர் கலந்த நீரில் போடவும். இதைச் செய்வதன் மூலம்,  வாழைப்பழங்கள் மற்றும் கத்திரிக்காய்கள் வெட்டிய பின் கருக்காமல் பிரஷ்ஷாக இருக்கும்.


இனிப்பு சோடா அல்லது பேக்கிங் சோடா - பேக்கிங் சோடா பல சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, சமையல் சோடா காய்கறிகளை கருத்து போகாமல் பாதுகாக்க மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இதற்காக, நறுக்கிய காய்கறிகளை ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் வைக்கவும். இது காய்கறிகளை பிரெஷ்ஷாக வைத்திருக்கும் கருத்தும் போகாது.


ALSO READ | வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR