பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணான கிளாரி வைஸ்மேன், வழக்கம் போல் பார்டி, ஆடல், பாடல், என காலத்தை கழித்து வந்தார்.
திடீரென்று ஒரு நாள் சமையல் அறையில் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, அவள் தனது அம்மாவை அழைத்தாள். அவளது அம்மா உடனேயே அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். அங்கே அவளுக்கு, 5 நிமிடத்தில் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் இருந்தது. அதன் எடை 3.48 கிலோவாக இருந்தது.
அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
குழந்தை பிறந்த முதல் 12 மணி நேரத்திற்கு, கிளாரி வைஸ்மேன் குழந்தையின் முகத்தை கூட பார்ப்பதை தவிர்த்தார். அந்த அளவிற்கு அவர் அதிர்ச்சியில் இருந்தார்.
ALSO READ | சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் உலக வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம்
குழந்தை பிறந்தபோது, கிளாரிக்கு 25 வயது, அவரது காதலனுக்கு 21 வயது.அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த க்ளாரிக்கு, கர்ப்ப்பமாக இருந்த காலத்தில் உடல் எடை எதுவும் அதிகரிக்கவும் இல்லை.
இது சாத்தியமா என பல்வேறு ஆச்சர்யமான கேள்விகள் எழுந்துள்ளன. இதனை cryptic pregnancy அதாவது, ரகசிய கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் அல்லது வேறு ஏதேனும் உடல் பிரச்சினை காரணமாக, கர்ப்ப காலத்திலும், மாத விடாய் நிற்காமல் ஏற்படுகிறது. அதனால், தான் கர்ப்பமாக இருப்பட்து பெண்களுக்கு தெரியாமல் போகிறது. மேலும், அவர்களது உடல் எடையிலோ அல்லது வடிவத்திலோ மாற்றம் ஏதும் காணப்படாததால், அவர்களுக்கு கர்ப்பம் இருப்பதை அறிய முடியாமல் போகிறது. இது மிகவும் அரிதாக நிகழும் சம்பவம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ALSO READ | இஸ்லாமியர்கள் இணைந்தால் 4 புதிய பாகிஸ்தான் உருவாகும்: TMC தலைவர் ஷேக் ஆலம்