சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் தலைவர் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அங்கிருந்த சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர் பாலாஜியை மீட்டு அவசர சிகிச்சை பேரில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்துரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து, அவருடன் இருந்த உறவினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் தாயார் புற்று நோய்க்காக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க - "எடப்பாடிக்கு என்ன சொல்றதுனு தெரில" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் புற்றுநோய் மருத்துவரான பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என எண்ணி இன்று புறநோயாளி போல் பாலாஜி சந்திக்க வந்த விக்னேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியின் மூலம் கழுத்தில் இரண்டு முறை குத்தி உள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை அறையில் அடைத்து கத்தியால் குத்தியதாக தகவல் வருகிறது, அதில் இருவரை கைது செய்துள்ளனர். அது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள். மருத்துவமனைக்கு 2000 பேர் வரை வருகிறார்கள், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் குற்றசாட்டு
இந்த சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது.
இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும். கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க - கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்... சீமான் கொந்தளிப்பு - காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ