NTK Chief Coordinator Seeman Latest News Updates: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று (நவ. 11) வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு?,"இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள்.. இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள்... இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.. தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா?
'இலங்கை மீது பொருளாதார தடை'
வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டின் பிரதமர், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? ஒரு சின்ன நாடு இலங்கை. ஆகவே, இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வேண்டும். மேலும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என சீமான் கோரிக்கை வைத்தார்.
மேலும் படிக்க | நல்ல கட்சிகள் எடப்பாடியை அணுகி உள்ளனர்! சூசகமாக தெரிவித்த எஸ்பி வேலுமணி!
'கலைஞர் சிலை உடைக்கப்படும்'
தமிழகத்தில் உள்ள அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை சூட்டுவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு?,"அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. வங்கதேசத்தை உருவாக்கிய முஜீப் உர்-ரஹ்மான் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆந்திராவிலும் இதேபோன்றுதான் ஜெகன்மோகன் ரெட்டி, பல இடங்களில் அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் பெயரை வைத்தார். அதை தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இருந்தபோதே இங்கு இடித்து தரைமட்டமாக்கினர்.
எனவே, தமிழ்நாட்டில் அதிகாரம் வேறொருவருக்கு மாறாதா, நல்ல தன்மானமுள்ள தமிழ்மகனிடம் போனால் அனைத்தும் அதேபோல் பொட்டல் ஆகிவிடும். அதனால் பார்த்து ஆடனும்" என திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.
'திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும்'
மேலும், தொடர்ந்து பேசிய சீமான்,"அதுல (தமிழ் தேசியம்) பாதி, இதுல (திராவிடம்) பாதி என்று கிடையாது. கல்விகேற்ற வேலை, பொருளாதாரா வளர்ச்சி உண்டு, திராவிடமும், தமிழ் தேசியமும் கூட்டணி நிற்க பயன்படும். ஆனால் இது போர், ஞாபகம் இருக்கட்டும். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்டது. அதில் இருந்து வசதியாக திருட, ஒதுங்கதான் திராவிடம். தமிழ் தேசியம், திடவிடம் இரண்டும் ஒன்று என்பதே தவறு. அது எப்படி கொலைகாரனமும், கொலையானவனும் ஒரே ஆளாக இருக்க முடியும். தமிழ் தேசியம் கடற்கரையை காக்கும், திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும். தமிழ் தேசியம் ஆட்சிக்கு வந்தால் கல்லறையை இடிக்கும்.
2026 தேர்தல் கட்டமைப்பு நடக்கிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். நான் என்ன செய்கிறேனோ அதைதான் பின்பற்றுகிறார்கள். திராவிட உப்பிஸ்க்கு (உடன் பிறப்புகளுக்கு) 200 ரூபாய் தான், தேர்தல் நேரத்தில் 1000 ரூபாய் வந்ததா? என கேட்பார்கள். தங்கைகள், 'அந்த ஆயிரம் டாஸ்மாக்கில் கணவர்கள் கொடுத்தார்கள்... உங்களிடம் வந்ததா?" என்று கேட்பார்கள். சீமான் தனித்து போட்டிதான், என் பயணம், என் கால்களை நம்பிதான் நான் உள்ளேன்.
மேலும் படிக்க | நடிகை கஸ்தூரி தலைமறைவு, செல்போன் ஸ்விட்ச் ஆப் - போயஸ் கார்டன் வீட்டுக்கு பூட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ