கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்  ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு பிப்ரவரி 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொடநாடு எஸ்டேட்  (Kodanadu Estate) கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலாலிதாவின் கார் ஓட்டுனர் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கனகராஜின் செல்போன் தடயங்களை அழித்து சாட்சியங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட்டனர். 


இந்த  குற்றச்சாட்டுக்காக தனிப்படை போலீசார், அக்டோபர் 25 ம் தேதி இருவரையும் சேலத்தில் கைது செய்து கூடலுார் கிளைச் சிறையில் அடைத்தனர். 


இவர்கள் இருவரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. 



ALSO READ | கோடநாடு வழக்கு - 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை!


கொரோனா வைரஸ் (Coronavirus) பெருந்தொற்று பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் காணொளி மூலம் சிறையில் உள்ள தனபால் மற்றும் ரமேஷிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். 


பின்னர் இருவருக்கும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.


ALSO READ | தற்கொலையா? கொலையா? 2 சிறுமிகளுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் 


ALSO READ | அனைத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது திமுக: வானதி சீனிவாசன்


ALSO READ | Nila Pen: நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு! பாரம்பரிய சடங்குகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR