தற்கொலையா? கொலையா? 2 சிறுமிகளுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரின் இருமகள்களின் உடல்களை கிணற்றில் இருந்து கைப்பற்றிய காவல்துறையினர், தற்கொலையா? அல்லது கொலையா என விசராணை நடத்தி வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2022, 01:40 PM IST
தற்கொலையா? கொலையா?  2 சிறுமிகளுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் title=

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் பகுதியில் இருந்த விவசாயக் கிணற்றின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், யாரேனும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தீயனைப்புத்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து கிணற்றில் தேடியுள்ளனர்.

ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!

அப்போது, இரு பெண் குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்டு பத்திரமாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை, புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்த ஞானவேல் மற்றும் அவரின் இருமகள்கள் என தெரியவந்தது.

கடந்த 15 ஆம் தேதி அவரின் மனைவியைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது, இரு மகள்களையும் அழைத்துச் சென்று எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவர்கள் மூன்று பேரின் உடலும் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கவிட்டுள்ளனர். கிணற்றில் இருந்து அவர்களின் உடல்களை மீட்கும்போது, இரு குழந்தைகளையும் கட்டிப்பிடித்தபடி, ஞானவேல் இருந்துள்ளார். இது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News