வேடசந்தூர் அருகே நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு செய்து சிறப்பு வழிபாடு விழா நடைபெற்றது. இந்த விழா விடிய விடிய நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு உலக அமைதி, ஊர் செழிக்க வேண்டி நிலா பெண் தேர்வு செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக இந்த கிராமத்திலுள்ள சிறுமிகள் பொது இடத்தில் இரவு முழுவதும் அமர வைக்கப்படுவர். எந்த சிறுமி விடியும் வரை தூங்காமல் இருக்கிறாரோ அந்த சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படுவார்.
இந்த ஆண்டுக்கான திருவிழா (Regligious Event), நேற்று இரவு துவங்கி இன்று காலை வரை விடிய விடிய நடந்தது. 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டதில் விஸ்வநாதன் மற்றும் விசாலாச்சி தம்பதியரின் மகள் பிரத்திக்ஷா நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார்.
ALSO READ | கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் 1000 பானையில் பொங்கல்
இவர் 3 ஆண்டுக்கு நிலா பெண்ணாக இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சிறுமி எல்லையிலுள்ள சரளிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவர் ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலைச்சுமையாக தேவிநாயக்கன்பட்டி எடுத்து வந்தார்.
ஊர் திரும்பிய சிறுமிக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாசடச்சியம்மன் கோயிலுக்கு சென்று சிறுமி வழிபட்டார்.
தொடர்ந்து ஊர் எல்லையில் முறைமாமன்கள் தென்னை ஓலையால் வேய்ந்திருந்த குடிசையில் அமர வைக்கப்பட்டார்.
பின், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் முன்பு சிறுமி அமர வைக்கப்பட்டு கும்மியடித்து (Regligious Event) சடங்கு செய்யப்பட்டது.
இன்று அதிகாலை நிலா மறைய தொடங்கியதும் ஆவாரம்பூ நிரம்பிய கூடையை சிறுமி தூக்கி சென்று அப்பகுதியில் தண்ணீரில் வீசுவார்.
தண்ணீரில் மிதந்த பூக்களில் அவர் விளக்கேற்றுவார். இந்த விளக்கு தொடர்ந்து 7 நாட்கள் எரியும் என்பது ஐதீகம் ஆகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR