நாடு முழுவதும் இருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பு திடீர் சோதனையில் ஈடுபட்டது. இதன் நிதிப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை சேகரித்த அதிகாரிகள், அந்த அமைப்பைச் சேர்ந்த பலரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது மத்திய அரசு. இது குறித்து நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை குறித்து மத்திய அரசுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். " PFI அமைப்புகளின் மீது NIA கடும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு PFI அமைப்பின் பின்புலம் என்ன? அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? வன்முறையில் அவர்களுக்குப் பங்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்வதற்கு முன்பு அன்றைய உள்துறை அமைச்சர் பாட்டில்  ஆர்எஸ்எஸ் அமைப்பை ஏன் தடை செய்கிறோம் என்பதற்கான காரணங்களை விளக்கி நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஆதாரபூர்வமாக விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க | வாஸ்து டிப்ஸ், வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்க்கலாமா 


அதை போல இன்றைக்குள்ள பாரதிய ஜனதா அரசு PFI-க்கு எதிரான காரணங்களை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆதார பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார். அவ்வாறு ஆதாரபூர்வ அறிக்கை வெளியிட்டால் தான் பாரதி ஜனதா அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக PFI அமைப்பை தடைசெய்துள்ளதா? அல்லது அரசியல் எதிரிகளை வீழ்த்த தடை செய்துள்ளதா? என்பது தெரிய வரும்" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | எஃப்.சி.ஐயில் 5014 வேலைவாய்ப்புகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ