Vijay To Introduce Tamilaga Vettri Kazhagam Flag : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்கழகம்” அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தாெடங்கிய நாளில் இருந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர், தற்போது தனது அடுத்தக்கட்ட அரசியல் பணியில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் அடுத்த மூவ்..!


நடிகர் விஜய், தான் அரசியலுக்கு வர இருப்பதை ஏற்கனவே தனது படங்கள் மூலம் ரசிகர்களுக்கு மறைமுகமாக அறிகுறிகளை காண்பித்து வந்தார். அனைவரும் சந்தேகப்பட்டது போலவே, சில மாதங்களுக்கு முன்பு தனது “தமிழக வெற்றிக்கழகம்” அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதற்கு செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட விஜய், அடுத்து சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். 


அனைத்து கட்சிகளுக்கும், சின்னமும், கட்சி கொடியின் அவசியம். அந்த வகையில், த.வெ.க கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் அடுத்து தனது அரசியல் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


எந்த பூ..? 


இந்த மாதம் (ஆகஸ்ட்) 22ஆம் தேதி, தனது கட்சியின் கொடியை விஜய் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கொடியில், இரு வண்ணங்களுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் அல்லது அவர் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அர்த்தம் என்ன?


சங்க இலக்கியங்களில் வாகை மலர் குறித்து அதிகமாக பேசியிருப்பர். பொதுவாக, வாகை மலர் வலுவான மரமாக பார்க்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் வெற்றி பெற்றவர்கள், இந்த மலரை சூடி வலம் வந்ததாக புறானங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில்,  “கண்டிப்பாக நம் பக்கம் வெற்றி” என்ற வகையில் த.வெ.க கட்சி கொடியில் இந்த மலர் இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்


மாநாடு எப்போது? 


நடிகர் விஜய், அடுத்து பெரிய அளவில் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாடு, விக்கரவண்டியில் நடைபெற உள்ளதாகவும், இது செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு முன்கூட்டியே அவர் தன் அரசியல் கட்சியின் கொடியை வெளியிடுவாராம். பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு விஜய்யின் மாநாடு இருக்கும் என கூறப்படுகிறது. 


2026 சட்டமன்ற தேர்தல்:


தனது அரசியல் கட்சியின் அறிவிப்பின் போது, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிய விஜய், அடுத்து வந்த விக்கரவண்டி தேர்தலிலும் போட்டியிடவில்லை. அரசியல் கட்சியின் அறிவிப்பின் போதே, தான் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிட போவதாக கூறிவிட்டார். இதையடுத்து, இவரது வருகையால் தமிழக அரசியலிலும், தேர்தலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு, ஏற்கனவே ரசிகர்கள் அதிகமாக இருப்பினும் இதை நம்பி தேர்தலில் நின்றால் அவர் வெற்றி பெறுவாரா என்பது இன்னும் கேள்வி குறியாக இருக்கிறது. தற்போது, விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் அடுத்த மாத ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. அடுத்து, தனது 69வது படத்தில் நடித்து விட்டு அத்துடன் சினிமாவிற்கு குட்-பை கூறுகிறார் விஜய். 


மேலும் படிக்க | தவெக கட்சிக் கொடி ரெடி... எப்போது வெளியாகும்?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ