அண்ணாமலை, சீமான், விஜய் தான் இளைஞர்களா? நான் யார்? மன்சூர் அலிகான் கேள்வி!
அண்ணாமலை, சீமான், விஜய் தான் இளைஞர்கள் என்றால், என்னை பார்த்தல் கிழவனாக தெரிகிறதா? என்று மன்சூர் அலிகான் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் இன்று வேலூருக்கு வருகை தந்து மக்களை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்," ஜனநாயக நாட்டில் வருட கணக்கில் ஆண்டு வருகின்ற கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி வருபவர்கள், இப்போதும் அதையே சொல்லி தேர்தலில் நிற்கிறார்கள். பாலாற்றில் மணலை அள்ளி விற்று வருகிறார்கள். ஆந்திரா அரசு 22 அணைகளை கட்டியுள்ளது. வேலூர் என்ற வெயிலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாலாற்றில் அணைகள் கட்டப்படாமல் இருந்தால் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்களுக்கும் அது ஆறுதலாக இருக்கும். ஆனால் அதை செய்யவில்லை. ஜெயித்தவர்களே மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள். ஆட்சி செய்து வருபவர்களே மீண்டும் நிற்கிறார்கள்.
மேலும் படிக்க | திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!
சிட்டிங் எம்பி கதிர் ஆனந்தின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,"அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அவரை எதிர்த்து நான் நிற்கிறேன். ஜனநாயகத்தில் புதியவர்கள் வரவேண்டும். எளியவர்கள் வரவேண்டும். அதனால்தான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளேன். காமராஜர், கக்கன், அப்துல் கலாம் உள்ளிட்டோர் எளிமையாக இருந்ததால் ஆட்சி எளிமையாக இருந்தது. வறுமையானவர்களிடம் வாக்கை பெற்று மிக கொடூரமாக ஆட்சி செய்கிறார்கள். தலைவர்களை எல்லாம் ஜெயிலில் போட்டு உள்ளார்கள். அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் ஜெயிலில் இருக்கிறார்கள் எங்கே தெரியுமா? சாலைகளில் கூண்டை போட்டு வைத்துள்ளீர்களே.
வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தால் கேவலமாக பேசுவார்கள். காமராஜர், பெரியார் உள்ளிட்டோரை பிடிக்காதவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவார்கள். அவர்களை பிடிக்காதவர்கள் இருப்பது போல நீங்கள் ஏன் ஆட்சியை ஆள்கிறீர்கள். இதுதான் அண்ணாரிசம் மற்றும் பெரியாரிசமா? இந்தியா முழுமைக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எல்லாருக்கும் வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும். திராவிடம் பேசிக் கொண்டு 70% தெலுங்கு காரர்களை உட்கார வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் விஆர்எஸ் கொடுத்துவிட்டு துரத்தி விடுங்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வைத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். சீட்டை தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு விஆர்எஸ் கொடுத்து அனுப்பிவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழனையே காணவில்லை.
நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிப்பவர் எல்லாம் கஞ்சா குடிக்கிறார்கள். ஹெல்மெட் இல்லாமல் போனால் லைசன்ஸ் எடு என்று நிப்பாட்டும் போலீசார், போதைப் பொருள் விற்பவரின் இரண்டு பேரின் தலையை வெட்டுங்கள். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தலையையே வெட்ட வேண்டும். முதலில் டாஸ்மாக்கை நிப்பாட்டுங்கள், தூக்கி போடுங்கள். தொழிற்சாலைகளை மூடுங்கள் விவசாயத்தை பெருக்குங்கள். தாயின் காலடியே சொர்க்கம் என்றார் நபிகள் நாயகம். பெரியார் பெண்மையை போற்றுங்கள் என்றார். பெண் என்பவள் தெய்வமானவள் பெண் இல்லையென்றால் இங்கு யாருமே இல்லை. ஆடம்பர உலகம் இருந்தாலும் பெண் என்பவள் பூஜிக்கப்பட வேண்டியவள், வணங்கப்பட வேண்டியவள். பெண்தான் கண்ணுக்குத் தெரிந்த கடவுள். குழந்தையாய், தாயாய், சகோதரியாய், மனைவியாய் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக பேசப்பட்டது ஆனால் திடீரென வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,"நேற்று முன்தினம் காலை திடீரென ஒரு ஒளிவட்டம் தோன்றியது. அந்த ஒளி வட்டத்தில் குமரகுருபா நீ நேரே அங்கே செல். வேலூரில் சென்று உன்னுடைய கொடியை நாட்டு. அங்கு சுற்றி காய்ந்த மலைகள் இருக்கின்றன. அங்கு பசுமை தேவை, என ஒரு குரல் வந்தது. அதனால் இங்கு பறந்தோடி வந்தேன். இதனால் தாங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா,"என கூறினார். ஆட்சி அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பதவி விலகி விடுங்கள். நிறைய ஆட்சி செய்து விட்டீர்கள். எளியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இயற்கை விவசாயத்தை உருவாக்குங்கள். நீர்நிலை ஆதாரத்தை பெருக்குங்கள். தமிழனை பிரதமராக உட்கார வையுங்கள்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. ஏற்கனவே மூன்று பேர் களத்தில் இருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,"யார் யார் அந்த மூன்று இளைஞர்கள் என (செய்தியாளர்களை நோக்கி) கேள்வி எழுப்பினார் மன்சூர் அலிகான். அப்போது அண்ணாமலை, சீமான் மற்றும் விஜய் என்று செய்தியாளர் பதில் தெரிவித்ததும்... மன்சூர் அலிகான் தனக்கே உரிய பாணியில் என்னை பார்த்தால் கிழவனாக தெரிகிறதா? அவர்கள் தான் இளைஞர்களா. நான் நல்லா தான் இருக்கிறேன். கொஞ்சம் முடி நரைத்துவிட்டது, அவ்வளவுதான். அண்ணாமலை கிட்ட நாட்டை கொடுத்து விடலாமா?. சீமான் மேஜர் ஜெனரலாக தான் ஆக வேண்டும் என்று இருக்கிறார். முதல்வராக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். விஜய் நேரடியாக முதலமைச்சர்தான் ஆவார். நானெல்லாம் மந்திரியாக கூடாதா? விஜய் சீன்லயே வரவில்லை, ஏன் அவரை வம்புக்கு இழுக்க வேண்டும். விஜய் எப்போது கட்சி தொடங்குவார் என்று காத்து கிடக்க வேண்டுமா? அவர் ஆரம்பித்த பிறகு அவர் கட்சியில் போய் சேர வேண்டுமா,"என்றார்.
மேலும் படிக்க | கொங்கு மண்டலத்தில் பாஜக கொடி பறக்குது, இந்த 5 தொகுதிகள் கன்பார்ம் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ