இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!


இந்த கூட்டத்திற்கு திமுக அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றுவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறி இருந்தார். இந்த செய்தி அதிகம் பேசுபொருளானது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.இ தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயக்குமார் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டாம். நாளைக்கே ராஜினாமா செய்யலாம். தேனியில் இரட்டை இலைதானே ஜெயிக்கப்போகிறது என ஆர்பி. உதயக்குமார் கிண்டல் அடித்தார். 


மேலும் பேசிய அவர், நேற்றே ஒருவருக்குப் பயம் வந்துவிட்டது. இந்த மாவட்டத்தின் அமைச்சர் மூர்த்தி நேற்று பேசும் போது கூறுகின்றார். அவரும் தவித்து போய் விட்டார். தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே கட்சிப் பதவியையும் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கூறுகின்றார். நீங்கள் ரிசல்ட் வரை வெயிட் பண்ண வேண்டாம். நாளைக்கே ராஜினாமா செய்து விடலாம். ஏனெனில் நீங்கள் தோற்பது உறுதி. மின் கட்டண உயர்வு போதைப்பொருன் நடமாட்டம் என மக்கள் உங்கள் மீது கோபத்தில் உள்ளனர். வாக்களிக்க மாட்டார்கள். நாளையே கவர்னர் மாளிகையில் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு களத்திற்கு வரலாம். ஏனெனில் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகட்டும் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் ஆகட்டும் ஓட்டு கேட்டுச் சென்றால் மக்கள் போப்பா. இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டிறேன் என்பார்கள். 


டிடிவி தினகரனே குக்கரை தூக்கிச் சென்றாலும் மக்கள் அவரிடம் இரட்டை இலைக்கு ஓட்டு என்பர். டிடிவி தினகரன் திமுகவும் அதிமுகவும் கூட்டு என பிரச்சாரத்தில் கூறுவது அரசியல் நாகரீகமாக தெரியவில்லை. அவருக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. ஆகையால் டிடிவி தினகரனை பார்த்தாலும் தங்கத் தமிழ்ச்செல்வனைப் பார்த்தாலும் மக்களுக்கு இரட்டை இலைதான் ஞபாகத்துக்கு வரும். ஏனென்றால் இப்பகுதி மக்களுக்கு  இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு சின்னம் தெரியாது. ஆகையால் நாராயணசாமி வெற்றி உறுதி எனக் கூறினார்.


மேலும் படிக்க | பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு! தமாகா-வில் விழுந்த அடுத்த விக்கெட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ