அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்! பரபரப்பு பின்னணி

வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 25, 2024, 04:20 PM IST
  • அமைச்சர் சேகர்பாபு - ஜெயக்குமார் வாக்குவாதம்
  • யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது?
  • பரபரப்பான வடசென்னை வேட்புமனு தாக்கல்
அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்! பரபரப்பு பின்னணி title=

வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக கலாநிதி வீராச்சாமி, அதிமுகவில் ராயபுரம் மனோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஒரேநேரத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றதால் வேட்புமனு தாக்கல் அலுவலகம் பரபரப்பானது. அதிமுக முன்பே சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் பெயரில் டோக்கன் வாங்கியது. அக்கட்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 7ம் நம்பர் டோக்கன் கொடுத்திருந்தார். திமுகவுக்கு இரண்டாவது டோக்கன் கொடுத்திருந்தாலும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பெயரில் அந்த டோக்கன் வாங்கப்பட்டிருந்தது. இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் அதிமுகவின் வேட்புமனு தான் வாங்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு மற்றும் வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி ஆகியோர் 2ம் நம்பர் டோக்கன் திமுகவுக்கு கொடுத்திருப்பதால் தங்கள் வேட்புமனுவை முதலில் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரவித்தனர். உடனே அமைச்சர் சேகர்பாபு ஆவேசமடைந்து ஜெயக்குமாரிடம் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்தார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. திடீரென பாஜக வேட்பாளர் பால் கனகராஜூம் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் இன்னும் அந்த இடத்தில் பரபரப்பு கூடியது. இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர், முதலில் வந்த அதிமுகவின் வேட்புமனு மட்டுமே வாங்கப்படும், இரண்டாவதாக வந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி மனு அதன்பிறகே வாங்கப்படும் என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

மேலும் படிக்க | ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

சுயேட்சை ஒருவரின் வேட்புமனுவை வாங்கிய பிறகு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வேட்புமனு தாக்கல் செய்ய, அதன்பிறகு திமுகவின் கலாநிதி வீராச்சாமி வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வாக்குவாதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், " காலையில் அ.தி.மு.க., சார்பில் முதல் ஆளாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய காலை 11:59 மணி அளவில் வந்தோம். ஆனால் வேட்பாளர் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என போலீசார் கூறியதால், நான் 5 நிமிடம் வெளியே காத்திருந்தேன். பின்பு வேட்பாளர் வந்த பிறகு, 7 நம்பர் டோக்கன் பெற்று  வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றோம். நாங்கள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய அறைக்குள் சென்ற நிலையில் திபு திபுவென தி.மு.க.,வினர் உள்ளே நுழைந்தனர்.  

நாங்கள் தான் டோக்கன் பெற்றிருந்தோம் எனவே நாங்கள்தான் முதலில் ரெட்மென தாக்கல் செய்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரண்டாம் எண் டோக்கன் பெற்று இருந்தாலும் அது மாற்று வேட்பாளர் பெயரில் இருந்தது. ஆனால் நாங்கள் ஏழாவது டோக்கன் பெற்றிருந்தாலும் அது எங்களது வேட்பாளர் பெயரில் இருந்தது. எனவே நியாயப்படி எங்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரியை கேட்டோம். அதிகாரியும் மிகவும் நியாயமாக நடந்து எங்களை தான் வேட்பு மனு தாக்கல் செய்ய பணித்தார். ஆனால் திமுக இதற்கு ஒத்துக்கொள்ளாமல் வழக்கம் போலவே அராஜகத்தில் ஈடுபட்டனர். அதிகாரி சொல்லியும் இருக்கைகளை விட்டு அவர்கள் எழுந்திருக்கவே இல்லை வெளியே செல்லவும் இல்லை. 

உரிய பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போதும் முதன்மை தேர்தல் அதிகாரியுடன் கலந்து ஆலோசித்த போதும் எங்களைத்தான் வேற்றுமை தாக்கல் செய்ய சொன்னார் ஆனால் அதற்கும் திமுக உடன்படவில்லை. ஆனால் அதிகாரி உறுதியாக இருந்து நியாயமா நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டால் எனவே அந்த வகையில் எங்களது வேட்பாளர்தான் வேட்பமான தாக்கல் செய்திருக்கிறார் இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். வீட்டுமனை தாக்கல் செய்ய காத்திருந்த நேரத்தில் தகாத வார்த்தைகளை கூறி திமுகவினர் வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நாங்கள் வழிமுறைகளை பின்பற்றி ஐந்து பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் இருந்தோம். ஆனால் அவர்கள் எட்டு பேர் வந்திருந்தனர். இதிலேயே திமுகவினர் அராஜகம் செய்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. எது எப்படியோ வெற்றி எங்களுக்கு கிடைத்து விட்டது" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கையில் தாமரையுடன் கோயிலில் வழிபட்ட தமிழிசை... நாளை வேட்பு மனு தாக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News