எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை தியாகராய நகரில் இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக அங்கு வந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு தொகுதியை கொடுத்தால்கூட போதும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியபோதும், அவர் 2 தொகுதிகளை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? திமுக தலைமை அதிருப்தி


செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், " தமிநாடு திராவிட மண் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. என்னுடைய கட்சியும் திராவிட கட்சி தான். கட்சி பெயரில் திராவிடம் இல்லை எனபதற்காக அமமுக திராவிட கட்சி இல்லை என்று ஆகிவிடாது. அன்புமணி ராமதாஸ் திராவிட கட்சிகளை பொதுவாக விமர்சித்தது என்பது திமுகவையும், எடப்பாடி பழனிசாமி சார்ந்த கட்சியை தானே தவிர, ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகள் அனைத்தையும் அவர் விமர்சிக்கவில்லை. அப்படி தான் நான் நினைக்கிறேன்.


தமிழ்நாடு பாஜக கூட்டணியில் அமமுக இணைவது உறுதியானதும், 9 தொகுதிகள் கொண்ட விருப்ப பட்டியலை மட்டும் நான் அண்ணாமலையிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அந்த எண்ணிக்கையை விட அதிக தொகுதியில் போட்டியிடுமாறு முதலில் கூறினார். பின்னர், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்புவதாக நான் கொடுத்த விருப்ப பட்டியலில் இருக்கும் சில தொகுதிகளை கேட்டார். கூட்டணி என்றால் அப்படி தான் இருக்கும் என்பதால், கடைசியில் ஒரே ஒரு தொகுதியை கொடுத்தால்கூட போதும் என்றேன். ஆனால் அவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுமாறு கூறியிருக்கிறார்கள்.


தஞ்சாவூர் என்னுடைய சொந்த மண், தேனி நான் அரசியல் பிரவேசம் எடுத்த மண். தஞ்சாவூரில் போட்டியிடவில்லை. மற்ற எந்த தொகுதிகள் என்பதை பாஜக டெல்லி மேலிடம் ஒப்புதல் கொடுத்த பிறகு தமிழ்நாடு பாஜக அறிவிக்கும். நானும் கூட இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு தீர்க்கமான முடிவு அறிவிப்பேன்" என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், எத்தனை தொகுதிகளில் போட்டி போடுகிறோம் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம் கூறினார். மேலும், " மக்களவைத் தேர்தலில் திமுகவின் பொய் பிரசாரங்களை வீடு வீடாக சென்று முறையிடுவோம். பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக அணில் போல் செயல்படும்." என்று கூறினார்.


மேலும் படிக்க | திருச்சி: ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மாலை....நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ