திருச்சி: ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மாலை....நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம். நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 20, 2024, 02:12 PM IST
  • தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்.
  • இன்று முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
  • திருச்சியில் வித்தியாசமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்.
திருச்சி: ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மாலை....நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் title=

Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது.  இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இன்று முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வேடிக்கைகளுக்கும் வினோதங்களுக்கும் பஞ்சம் இருக்காது. மக்களின் மனதில் இடம்பெறவும் அவர்கள் வாக்கை தங்களுக்கே போடுவதை உறுதி செய்யவும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பல உத்திகளை கையாள்வார்கள். பிரச்சாரத்தை விடுங்கள், வேட்புமனு தாக்கல் செய்யவே நான் வித்தியாசமாகத் தான் வருவேன் என ஒரு வேட்பளர் முடிவெடுத்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

கழுத்தில் கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு அட்டைகளை மாலையாக அணிவித்து வந்து அசத்திய வேட்பாளர்

டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை அவர் மாலையாக அணிந்து வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நூதன சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன், “சுதந்திர நாட்டில் சுதந்திரம் பல நேரங்களில் இல்லை. டிஜிட்டல் மயம் என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் அது இன்னும் வரவில்லை. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தவில்லை. 

மேலும் படிக்க | வெற்றி மட்டுமே முக்கியம்.. மாவட்டச் செயலாளரும், அமைச்சருக்கும் முதலமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மற்றும் அரசு வங்கிகளில் கொடுக்கப்பட்ட ஏடிஎம்  டெபிட் கார்டுகள் பல வங்கி ஏடிஎம்களில் செயல்படவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு பணம் கட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்பது வேதனை அளிக்கின்றது” என்றார்.

டிஜிட்டல் இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி வேட்பு மனு தொகை கிரெடிட் கார்ட் மூலம்தான் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

டிஜிட்டல் மயமாக்கலில்  பல குளறுபடிகள் உள்ளன  என்பதை சுட்டிக்காட்டவே இது போன்று நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்யவே வந்ததாகவும் அவர் மேலும் கூறினார். 

மேலும் படிக்க | திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News