Latest News Breast Milk Sold Illegally : சென்னை மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் அடைந்த தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதவரம் கே கே ஆர் கார்டன் முதலாவது தெருவில்  லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்ற மருந்து விற்பனை கடை உள்ளது. இதனை  கேகேஆர் கார்டன் பகுதியை சேர்ந்த செம்பியன் முத்து என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. 


இங்கு தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போஸ், கஸ்தூரி ஆகியோர்கள் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கு மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .


மேலும் படிக்க | மனைவியிடம் தாய் பால் குடிக்கும் கணவன்... நன்மைகள் கொட்டி கிடக்குதாம்.. இது நல்லா இருக்கே!


சுமார் 200 மிலி கொண்ட இந்த தாய்ப்பால் பாட்டில் விலை சுமார் 700 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இந்த தாய்ப்பால் யாரிடமிருந்து பெறப்பட்டது எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது போன்ற விசாரணையில் மருத்துவத்துறை அதிகாரிகளும் விசாரணைமேற்கொண்டு வருகின்றார்கள். இதன் பின்னர் முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதற்கு முறையான உரிமம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டது. சட்டவிரோதமாக  மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ