Breast Milk: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை வழிகள்

தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகள் இவை. கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் ஆன பிறகு மார்பகங்களில் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க நிபுணர்கள் கூறும் சுலபமான வழிமுறைகள் இவை.  

1 /6

பிரசவத்திற்குப் பிறகு, குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, பெண்களின் மார்பகத்தில் போதுமான பால் இல்லை என்றால், குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

2 /6

பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க வெந்தயம் உதவும், வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கவும். இது தவிர ஊறவைத்த வெந்தயத்தை அரிசி மற்றும் பாலுடன் சமைத்து சாப்பிடவும்.

3 /6

தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள், உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4 /6

முருங்கை இலையை சின்ன வெங்காயத்துடன் நெய்யில் வறுத்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளவும். இது தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.

5 /6

பால் சுரப்பு குறைந்தாலும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள், ஏனெனில் குழந்தை மார்பகங்களை சப்பி பால் குடிக்கும்போது, தாய்ப்​​பால் சுரப்பு இயல்பாகவே அதிகரிக்கும். எனவே குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்  

6 /6

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்போதும் சமச்சீரான உணவை எடுத்துக்கொண்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.