Latest News Water Management Fund : கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக, தமிழ முதலமைச்சர்,ரூ.150 கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகித்தை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி  ஒதுக்கிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை தாக்கும் கோடை வெயில்!


தமிழகத்தில், மே மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இதனால், மக்கள் அவதிப்படுவது மட்டுமன்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் நிலையும் ஏற்பட்டது.  மேலும், மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர். 


மேலும் படிக்க | உளுந்தூர் பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ காரணம்! பின்னணி இதுதான்


முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:


குடிநீர் பிரச்சனையை தீர்க்க, இன்று சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதான், அவர் குடிநீர் மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி குறித்து தெரிவித்தார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகித்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளவும்,  கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் ஆகியவை தடையின்றி செயல்படவும், சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ