கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு... சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!
இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானதி சீனிவாசன் அஞ்சலி
கோவை மாதம்பட்டி அருகே பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் நரேஷ் குமார் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றபட்டது. நரேஷ்குமார் உயிரிழந்த தகவலை அடுத்து பிரேத பரிசோதனை அறையின் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் திரண்டனர்.
இதனிடையே அங்கு வந்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உறவினர்களை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நரேஷ் குமார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நரேஷ்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சீர் செய்து அனுப்பினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ