மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டி

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார்.

Guru Peyarchi Palangal: குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. பஞ்சாங்க கணக்கீடுகளின் படி, குரு மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சிக ராசிகளுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

1 /11

அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம், கல்வி, அறிவாற்றல், செழுமை ஆகியவற்றின் காரணி கிரகமாக இவர் இருக்கிறார். 

2 /11

மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு குரு அருளால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், குடும்பத்தில் குதூகலம் இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /11

ரிஷபம்: ரிஷப ராசியில் தான் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆகையால் இவர்களுக்கு குரு அருளால் அதிக நன்மைகள் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் வியாபாரம், தொழில், கல்வி, பண விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாடு இருக்கும். 

4 /11

மிதுனம்: குரு பெயர்ச்சியின் சுப தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் அலுவலக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு அதிகமாகும். உங்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். குருவின் அருளால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

5 /11

கடகம்: குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். எதிர்பாராத பண வரவால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் தருவார்.

6 /11

சிம்மம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம் வருவதற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குரு அருளால் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆறுதலும் அதிகரிக்கும்.

7 /11

கன்னி: குரு பெயர்ச்சியால் உருவாகும் சுப யோகத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும். குருவின் அருளால் பழைய கடனில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்.

8 /11

மகரம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

9 /11

கும்பம்:  கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். செல்வம் பெருகும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் தொடர்புடையவர்கள் பணக்காரர்களாக மாறுவார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு நிலம், வீடு மட்டுமின்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். 

10 /11

குரு பகவானின் அருள் பெற,  குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.