கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை சரவணம்பட்டி விநாயகபுரம் சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, 'ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அதற்கு ஒரு பெரும்பான்மையான அரசு அமைவது அவசியமாகிறது. இந்தி கூட்டணி கட்சியினர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடக்கின்றனர். 2004 முதல் 2014 வரை நாடு எவ்வளவு கஷ்டப்பட்டதோ அதை மீண்டும் காண்பிக்க வேண்டும் என அவர்கள் முயற்சிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி


ஆனால், நமக்கு 400க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று மோடி மீண்டும் பிரதர் ஆக வேண்டும். கடந்த ஆண்டுகளில் கோயம்புத்தூருக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும் எந்த வளர்ச்சியும் இல்லாமல் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளனர்.  எனவே, மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் கோயம்புத்தூரில் விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, பாலங்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் போன்ற முக்கிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவையை பொறுத்தவரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு எந்தவித குண்டும் குழியும் இன்றி சாலையை கடக்க முடிந்தால் அது உலக சாதனையாகும். கோவையின் உள்கட்டமைப்புகள் மிக மோசமாக உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் என குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


சுத்தத்தில் 40, 50 வது இடத்தில் இருந்த கோயம்புத்தூர் 176 வது இடத்திற்கு போய் உள்ளது. காரணம் வெறும் 12% குப்பைகள் மட்டுமே திட மேலாண்மைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள குப்பையை சேமித்துக் கொண்டே வருகின்றனர். கோயம்புத்தூரில் இருந்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது மட்டுமே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நோக்கமாக உள்ளது. கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு முன்பு சாலைகளை போட்டு கொடுங்கள். கிரிக்கெட் ஸ்டேடியம் வேண்டுமென்றால் பிசிசிஐ இடம் கேட்டு நிதி வாங்கி நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம்.


முதலில், கோயம்புத்தூரில் சரியான சாலைகளை அமைத்துக் கொடுங்கள், பஸ் நிலையம் மேம்படுத்துங்கள், குப்பையை சரியாக தரம் பிரியுங்கள். அதை விட்டுவிட்டு ரோட்டில் நடக்க தெரியாதவன் ஆகாயத்திற்கும் பூலோகத்திற்கும் குதிப்பது போல முதல்வர் பேசி வருகிறார். கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு தான் 4000 கோடியை பெற்று அதில் கமிஷன் அடிக்க முடியும். எனவே இந்த முறை மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். கோயம்புத்தூர் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். எனவே ஏப்ரல் 19ஆம் தேதி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்' என தெரிவித்தார்.


மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ