Latest News TN Weather Update : தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல், கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையில், கடந்த மாதம் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் இந்த மாதம் அனல் காற்றும் வெயிலும் மண்டையை பிளந்து வருகிறது. இதையடுத்து, இன்று தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பின் படி, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், வரும் 20ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், அதற்கு அடுத்து 21-23ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. 


எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:


ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று, 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி, கன்னியாகுமர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கோவை மாவட்ட மலை பகுதிகளிலும் நீலகிரி, திருப்பூர், தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | திருநெல்வேலி : சாதிய பாடல்களை போடக்கூடாது - காவல்துறை கடும் எச்சரிக்கை


அதே போல, ஆகஸ்ட் 19ஆம் தேதியான நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேனி, திண்டுக்கல், தருமபுரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


சென்னை வானிலை எப்படி? 


சென்னையில், கடந்த சில ஆண்டுகளாக வெப்பமான சூழல் நிலவி வருகிறது. இன்று, 30 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் நிலவும் என்றும், ஆங்காங்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சென்னை மக்கள் மழை வருவதை பற்றி கவலைப்பட தேவையில்லை. 


மேலும் படிக்க | த.வெ.க கட்சி கொடி விரைவில் அறிமுகம்! அதில் வாகை பூ இருக்காம்-அர்த்தம் இதுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ