Tirunelveli : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்டத்தின் மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இந்த மோதல் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அண்மையில் பள்ளிக்கூடங்களிலேயே நடைபெற்ற சாதிய மோதல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சாதிய மோதல்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
மேலும் படிக்க | கடுகடுத்த ஸ்டாலின்... அச்சத்தில் நிர்வாகிகள் - மா.செ. மீட்டிங்கில் நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
இந்த சூழலில், பேருந்து நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் உடனான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவது போன்ற சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
சாதிய மோதல் குறித்து தெரிவிக்க வலியுறுத்தல்
மாணவர்களிடையே நடைபெறும் சிறு சிறு மோதல்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஜாதிய ரீதியிலான மோதல் தடுக்கும் வகையிலும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்கள் அழித்துவிட்ட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மீறி ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் ஒட்டுநர் ,நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
இதுமட்டுமல்லாது சாதிய மோதல்கள் குறித்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. சாதிய மோதலில் ஈடுபடுபவர்கள் மீது பதியப்படும் வழக்குகள், சிறைவாசம், தண்டனை மற்றும் அதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் எதிர்காலம், குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் மாணவர்களிடம் காவல்துறை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ