மதுரை ஆதீனம் மற்றும் ஸ்டான் சுவாமிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.!!
மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், மதுரை ஆதீனம், ஸ்டான் சுவாமிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடிய ஸ்டான் சுவாமிக்கும் மற்றும் சைவ சமயத்தையும் மத நல்லிணக்கத்தையும் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை பரப்பி வந்தவருமான மதுரை அருணகிரிநாதருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் காலை 10 மணிக்கு கூடியது. இக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களான ஆண்டிமடம் க.ந. ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி தங்கராசு, பெரியகுளம் கே.பண்ணை சேதுராம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அய்யாறு வாண்டையார், நன்னிலம் கலையரசன், திண்டிவனம் ராமமூர்த்தி, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அரக்கோணம் விஜயசாரதி, மருங்காபுரி செங்குட்டுவன், சமீபத்தில் மறைந்த ஆர்.கே.நகர் மதுசூதனன் போன்ற உறுப்பினர்கள் மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் தவிர "சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வந்த வரும் பெரியாரின் கொள்கைகளை தனது நெஞ்சினில் நிறுத்தி சமூக நீதியின் பாதையில் பயணித்து பொது தொண்டாற்றிய "மார்க்சிய, பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து அவர்களுக்கும் காது, மூக்கு ,தொண்டை அறுவை சிகிச்சை பிரபல நிபுண மருத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவையாற்றி வந்த வருமான எஸ்.காமேஸ்வரன் மற்றும் "தமிழையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவரும் இலக்கண பெருமையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியின் பண்பாட்டை தமிழர்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் கொண்டு சேர்க்க பாடுபட்ட வருமான தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களுக்கும்,
தனது வாழ்நாள் இறுதிவரை தமிழையும், சைவ சமயத்தையும் பரப்பியதோடு மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து மதநல்லிணக்கத்தை பரப்பிய மதுரை ஆதீனம் அருணகிரி நாதருக்கும் மற்றும் "பழங்குடியின மக்கள் உரிமைக்காகவும் அவர்களுடைய மேம்பாட்டிற்காகவும் போராடிய வரும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்வு மேம்பாட்டிற்காக சமூகத் தொண்டாற்ற தனது வாழ்வையே அர்ப்பணித்த ஸ்டான் சுவாமி ஆகியோர்களின் மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பின்பு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.!!
ALSO READ | மதுரை ஆதீனம் மறைவு: அடுத்த மதுரை ஆதீனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR