தமிழகத்தில் டாஸ்மாக்கில் நேற்று ரூ. 426.24 கோடிக்கு மது விற்பனை!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலை காரணமாக, பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற வணிக நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா பரவலைக் (Coronavirus) கட்டுப்படுத்த நாளை முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் வாடகை டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்டவை இயங்காது என்றும் மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | வீட்டுக்கு மதுபானம் விநியோகம், இந்த மாநிலத்தில் புதிய ஆப் அறிமுகம்!
மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் (Tasmac) மற்றும் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
அதில், சென்னை மண்டலத்தில் நேற்று அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரையில் ரூ.87.20 கோடி, சேலத்தில் ரூ.79.82 கோடி, கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதனால் டாஸ்மாக் மூலம் மட்டுமே தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று விட இன்று அதிகளவில் மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 MT ஆக அதிகரித்தது மத்திய அரசு
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR