சென்னை திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ள படங்களில் பட்டியல்! முழு விவரம்!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 22வது பதிப்பு வரும் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட அமைப்புகளின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (ICAF) வழங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வை கட்டமைத்துள்ளது. சென்னை சர்வதேச திரைப்பட விழா என்பது சென்னையின் கலை நுட்பத்தை பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார அடையாளமாகும். தென்கிழக்கு ஆசியாவின் முதல் திரைப்பட விழாவாக கருதப்படும் இது, ஒவ்வொரு ஆண்டும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கி, உலகத்தை சென்னையின் உள்ளங்கையில் கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டம், நகரத்தின் திரைப்படங்களுக்கான ஆழமான அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சென்னையை ஒரு உலகளாவிய கலாச்சார மையமாக உயர்த்துகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச மற்றும் இந்திய பானோரமா திரைப்படங்களின் சிறந்த பகுதிகளை திரைப்பட ஆர்வலர்களான சென்னை மக்களுக்கு வழங்குவது போலவே, சிறந்த தமிழ் திரைப்படங்களை உலக மக்களுக்கும் காட்டுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 22வது பதிப்பில் (டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை) திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் இதோ.
அமரன்
போட்
புஜ்ஜி அட் அனுப்பட்டி
செவப்பி
ஜமா
கொட்டுக்காளி
கோழிப்பண்ணை செல்லதுரை
லப்பர் பந்து
மகாராஜா
மெய்யழகன்
நந்தன்
ரசவாதி
தங்கலன்
வாழை
வெப்பம் குளிர் மழை
வேட்டையன்
அயாலி
டிமாண்டி காலனி 2
கருடன்
ஹாட்ஸ்பாட்
லாக்டவுன்
நீல நிற சூரியன்
பார்க்கிங்
டீன்ஸ்
வல்லவன் வகுததாதா
|
மேலும் படிக்க | தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ