Rain Live Updates: சென்னையை அச்சுறுத்தும் இடி, மின்னல் - கோடம்பாக்கத்தில் பேய் மழை!
Heavy Rain Alert Tamil Nadu News: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும், வங்க கடலில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.
Latest Updates
Chennai Rains: கோடம்பாக்கத்தில் அதிக மழை
சென்னையில் கோடம்பாக்கத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழையை விட பொதுமக்களை இடியும், மின்னலும் பயங்கரமாக இருக்கிறது.
TN Rains: சென்னையில் பயங்கர இடி மின்னலுடன் அதிகனமழை
சென்னையில் தற்போது இடி, மின்னலுடன் பயங்கர மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்தில் அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.
TN Rains: இன்று இரவு மற்றும் நாளை காலையில் கனமழை
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது பதிவில் தற்போது,"புதுச்சேரி மற்றும் கடலூரில் இருந்து மேகங்கள் மெல்ல நகர்ந்து வருகின்றன. அதுவும் இரவு முதல் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும், மழையை நன்றாக அனுபவிக்கவும்!!!. கோயம்புத்தூரில் வழக்கமாக மாலையில் மழை பெய்தது. இது கோயம்புத்தூரை பொறுத்தவரை அதிக மழை பெய்த மாதங்களில் ஒன்றாகும். மதுரை - சிவகங்கை வட்டாரத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
TN Rains: சென்னையில் அடித்து துவைக்கும் மழை
சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழைப் பெய்ய தொடங்கி உள்ளது.
TN Rains: விழுப்புரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் முன்னெச்சரிக்கையாக நாளை (அக். 15) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Rains: இதுவரை 5 மாவட்டங்களில் விடுமுறை...!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடலூரிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 15) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
TN Rains: காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்?
தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவல்லிக்கேணி காவல்நிலையம் தற்காலிமாக மூடப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TN Rains: அலைமோதும் மக்கள் கூட்டம்
கனமழை எச்சரிக்கை எதிரொலி காய்கறி, முட்டை, பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைக்க சென்னையின் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில், கடைகளில் மக்கள் அலைமோதும் வருகின்றனர்.
TN Rains: சென்னைக்கு மழை எப்போது?
மத்திய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் மேகமூட்டம் காரணமாக புதுச்சேரி மற்றும் வடக்கு டெல்டா கடலோரப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது என்றும் சென்னையில் மழைக்கு இன்னும் 6 முதல் 12 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தனியார் வானிலை கணிப்பாளர் ராஜா ராமசாமி அவரது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்தது மழை
சென்னையின் கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, வளசரவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கூடுதல் மெட்ரோ ரயில்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அக். 15, 16, 17 ஆகிய மூன்று நாள்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் 20 செ.மீ., மழைக்கு வாய்ப்பு
அக். 16இல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 20 செ.மீ., மழைக்கு வாய்ப்பு என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் நாளை (அக். 15) அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- இன்று 10 மாவட்டங்களில் கனமழை
சென்னை, காஞ்சிபும், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அலர்ட்டாகும் வேளச்சேரி...!
- சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், தொடர் கனமழையை எதிர்கொள்ள மக்கள் செய்ய வேண்டியவை குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
மக்களே... தொடர் கனமழை காத்திருக்கு... முக்கியமான இதையெல்லாம் ரெடியா வைங்க!
ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அக். 15 முதல் 18 வரை வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தல்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
சென்னையில் காற்று
சென்னையில் நேற்று இரவு நல்ல மழை பெய்த நிலையில், தற்போது அதிக காற்று வீசி வருகிறது. இதனால் இன்று இரவும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசல்
மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே மூடப்படாமல் உள்ளதால், சென்னையில் ஒருசில பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.
கூடுதல் போலீசார் தயார்!
பருவ மழையை சமாளிக்க ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரை போன்றே சிறப்பு பயிற்சி பெற்ற இவர்கள் 12 துணை கமிஷனர் அலுவலகங்கள் நான்கு இணை கமிஷனர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே பிரித்தும் கொடுக்கப்பட்டு உள்ளனர்.
காவல் ஆணையர் உத்தரவு
தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில்50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.
முதல்வர் ஆலோசனை
நாளை அல்லது நாளை மறுநாள் கனமழை பெய்ய உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறார்.
12 செ.மீ மழை பெய்யும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.
கோவையில் மழை
கோவை மாநகரில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறையா?
"மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
மதுரை, தேனியிலும் மழை
அடுத்த வரும் 24 மணி நேரத்துக்குள் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து. வடதமிழகம், தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கிறது. மாலை முதல் மழையின் அளவு அதிகரிக்க துவங்கும்.
சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை; அதனால் எந்த சுரங்கப்பாதையும் முடப்படவில்லை - சென்னை மாநகராட்சி தகவல்
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு இருப்பதால், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கனமழை குறித்த அப்டேட்
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவிற்கு வரவிருக்கும் கனமழை குறித்த அப்டேட் தந்த தமிழ்நாடு வெதர்மேன்.
மிக கனமழை எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை மழை - சென்னை மாநகராட்சி
சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில்m எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் எந்த சுரங்கப்பாதையும் முடப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில், 17, 18, 19ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு பகுதி 15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும்.