Thalapathy Vijay`s First Political Speech Live: தவெக மாநில மாநாடு - திணறும் வி.சாலை... 10 லட்சம் தொண்டர்கள் வர வாய்ப்பு!

Sun, 27 Oct 2024-11:00 am,

TVK Conference Live Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நாடே உற்றுநோக்கி வருகிறது. இந்த மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Thalapathy Vijay TVK Conference Live Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிராவாண்டியை அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பரளவில் இந்த மாநாடு திடல் அமைந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு அங்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுமார் 3 லட்சம் அளவில் தொண்டர்கள் அங்கு குவிய இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய மாநாடு (TVK Conference) மாலை 4 மணியளவில் தொடங்கும் என கூறப்படுகிறது. மாநாட்டு மேடை அருகே இருக்கும் 100 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் (TVK President Vijay) ஏற்றிவைக்க உள்ளார். அதை தொடர்ந்து, மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் தனது உரையை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. இந்த உரையில் கட்சியின் கொள்கையை அவர் பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமிட்டுமின்றி கட்சியின் எதிர்கால திட்டமிடல், அரசியல் வியூகம் ஆகியவற்றையும் அவர் தனது உரையில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அந்த வகையில், விஜய்யின் அரசியல் பயணத்தில் இன்று முக்கியமான நாள் எனலாம். அவரின் அரசியல் வாழ்வு எப்படி அமையப்போகிறது என்பதை இந்த மாநாடும், அவரது பேச்சும்தான் தீர்மானிக்கப்போகின்றன. அரசியல் களத்தில் அவர் மீதான எதிர்பார்ப்புகள், அவர் குறித்த பார்வைகள் அனைத்தும் இந்த மாநாட்டிற்கு பின் நிச்சயம் மாற்றம் அடையும், அது நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் மாறலாம். விஜய் சுமார் 2 மணிநேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த பேச்சையும், அரசியல் வீச்சையும் காண அவரது ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மாநில முழுவதும் இருந்து வி.சாலை மாநாட்டு திடல் நோக்கி இரவு முதலே வருகை தர தொடங்கிவிட்டனர். 


விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (Tamilaga Vetri Kazhagam) முதல் மாநில மாநாட்டை நாடே உற்றுநோக்கி வருகிறது. இந்த மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும், செய்திகளையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாசகர்கள் இந்த பக்கத்துடனே இணைந்திருங்கள்.


இவற்றையும் படிங்க: 


தவெக மாநாட்டில் விஜய் பேசப்போகும் 5 முக்கியமான விஷயங்கள்..!


களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் வீர தமிழச்சியின் கட் அவுட்! யார் இந்த அஞ்சலை அம்மாள்?


விஜய் மாநாட்டு திடலில் பிரம்மாண்டமான பார்க்கிங் ஏற்பாடுகள்


தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் இடத்தின் ட்ரோன் காட்சிகள்


ரொம்ப ஆர்வமா இருக்கோம் - தவெக மாநாட்டுக்கு வந்த பெண் உற்சாகம்!!

Latest Updates

  • TVK Conference: 10 லட்சம் பேர் வர வாய்ப்பு

    தற்போதே சுமார் 3 லட்சம் பேர் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலுக்கு வருகை தந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் மாலை மாநாடு தொடங்கும்போது சுமார் 10 லட்சம் பேர் வரை 

  • TVK Conference: புதுச்சேரியில் விஜய்...?

    தவெக தலைவர் விஜய் நேற்றே வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார் என தகவல் வெளியானது. ஆனால், விஜய் நேற்றிரவு புதுச்சேரியில் இருந்ததாகவும், இன்று காலையில்தான் அங்கிருந்து அவர் புறப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • TVK Conference: மாநாட்டுக்கு புறப்பட்ட ஒருவர் பலி

    சென்னை தேனாம்பேட்டை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மணல் ஏற்றிவந்த லாரி மோதியதில் விபத்து, இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

  • TVK Conference: சுங்கக்கட்டணம் கிடையாது

    தவெக மாநாடு நடைபெற உள்ள வி.சாலை அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அக்கட்சி தொண்டர்கள் வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியின் கடைசி பகுதி தவெக தொண்டர்களின் வாகனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தகவல் வந்துள்ளது.  

  • TVK Conference: இன்று புதிய பாடல் வெளியீடு

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடலை அதன் தலைவர் விஜய் இன்று மாநாட்டில் வெளியிட இருக்கிறார். 'தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் வெற்றி திலகம்', 'மண்ணை உயர்த்திட, மக்களை உயர்த்திட இவன் வந்தான்', 'எல்லாருக்கும் எல்லாருக்கும் நல்லா இருக்கும், அண்ணன் வந்து ஆட்சி செஞ்சா..!' போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • TVK Conference: குழந்தைகள், சிறுவர்களை அழைத்து வர வேண்டாம்

    தவெக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே பல்வேறு முறை அறிவுரை வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவுரையை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொண்டர்கள் குழந்தைகள், சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என தற்போது அறிவுறுத்தி உள்ளார். முன்னரே, கர்ப்பிணிகள், முதியோர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே ஊடகங்கள் வாயிலாக பார்க்க அவர் அறிவுறுத்தியிருந்தார். தொடர்ந்து, நேற்று வெளியிட்ட கடிதத்தில் தொண்டர்கள் இருச்சக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தியிருந்தார். 

  • TVK Conference: தொண்டர்களுக்கு சான்றிதழ்

    தவெக மாநாட்டில் பங்கேற்றதற்கான E-certificate-ஐ தொண்டர்கள் முகப்பில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

  • TVK Conference: தடுப்புகளை தாண்டிய தொண்டர்கள்

    திடலுக்குள் அனுமதி இல்லாத நிலையில், தடுப்புகளை உடைத்துக்கொண்டும், அதனை தாண்டி எகிறி குதித்தும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • TVK Conference: தொண்டர்களுக்கு எப்போது திடலுக்குள் அனுமதி?

    நெல்லை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு நேற்றிரவு முதல் வரத்தொடங்கினர். காலை 11 மணிக்குதான் திடலில் அனுமதி கூறப்பட்டுள்ளதால் வெளியே காத்திருக்கின்றனர். தற்போது மாநாட்டு திடலுக்கு முன் ஆயிரக்கணக்கோனர் குவிந்துள்ளதால், இருக்கைகள் குறைவாக உள்ள நிலையில் முன் கூட்டியே அமரவைக்க திட்டம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

  • TVK Conference: கேரவனில் வந்தது விஜய்யா...?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேரவன் மூலம் வந்தார் என கூறப்பட்டது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

     

  • TVK Conference: மாநாட்டு திடலில் விஜய்?

    தவெக தலைவர் விஜய் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலுக்கு வந்தடைந்தார் என கூறப்பட்டது. மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ததாகவும் கூறப்பட்டது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link