மே 31 பிறகும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை
COVID-19 ஊரடங்கு காலம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்.
சென்னை: COVID-19 தொற்று சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தமிழக முதல்வர் கூறுகிறார், மேலும் ஊரடங்கு (Lockdown 5) காலம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi Palaniswami) வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்.
வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு மணி நேர உரையாடலை முடித்துக்கொண்ட அவர், ஊரடங்கு (Lockdown) உத்தரவின் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் எந்த மாவட்டத்திற்கும் தளர்வு வழங்க முடியாது என்று கூறினார்.
"நீங்கள் ஏதேனும் தளர்வு பெற விரும்பினால், தயவுசெய்து தலைமை செயலாளர் கே.சண்முகனை தொடர்பு கொள்ளுங்கள். எந்த அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலைப் பெறுங்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் பழனிசாமியின் (Edappadi Palaniswami) கூற்றுப்படி, சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவது கட்டுப்பாட்டில் இருந்தது எனக் கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது பிற மாநிலங்களிலிருந்து வரும் அனைவரையும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக மட்டுமே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று அவர் அதிகாரிகளை எச்சரித்தார்.
அதிகாரிகளிடம் முதல்வர் பேசும்போது...
"சென்னை தவிர, பிற மாவட்டங்களில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு உங்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், இதனால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் முதலவர் பழனிசாமி.
எந்தவொரு பெரிய தளர்வையும் அறிவிப்பதில் இருந்து சென்னை (Chennai) நிலைமை அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்துவதாக விவாதங்களில் இருந்து அறியலாம் என்று இந்த உரையாடலில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.
பிற செய்தி படிக்கவும்: மற்ற மாநிலங்களை விட தமிழகம் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறது...
அன்றைய கலந்துரையாடல் முக்கியமாக வடக்கு மாவட்டங்களின் நிலையை மையமாகக் கொண்டது மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
பல தொழில்துறை பிரிவுகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தங்கள் மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக ஆன்லைன் பதிவு செய்திருந்தாலும் கூட, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தைப் பொறுத்தவரை, பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் 100% பேர் வேலைக்கு அனுமதிக்கப்படலாம்.