`Lockdown Package`-களை வழங்கி கொரோனா காலத்தில் மக்களை ஈர்க்கும் சென்னை சொகுசு ஓட்டல்கள்
புதிய COVID கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களை ஈர்க்க சொகுசு ஓட்டல்கள் புதிய தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத இந்த அவசர நிலையை சமாளிக்க ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை லாக்டவுனும் விதிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவு மாநிலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.
சொகுசு ஓட்டல்களில் புதிய தொகுப்புகள்
புதிய COVID கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களை ஈர்க்க சொகுசு ஓட்டல்கள் புதிய தொகுப்புகளை அறிவித்து வருகின்றன. ஆடம்பர ஓட்டல்கள் இப்போது குடியிருப்பு வார இறுதி தொகுப்புகளை (Resedential Weekend Packages) வழங்குகின்றன. இந்த தொகுப்புகள் குறுகிய காலத்திற்கும் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் அளிக்கப்படுகின்றன. இவை 'லாக்டவுன்-கேஷன்' என அழைக்கப்படுகின்றன.
மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் அதே நேரத்தில், பணத்தையும் ஈட்ட, பெரிய மருத்துவமனைகள் தாங்களே உணவு வழங்கும் வசதிகளையும்,பல்வேறு மெனு ஆப்ஷன்களையும் துவக்கி வருகின்றன. COVID விதிமுறைகள் (Restrictions) பின்பற்றப்பட்டு இந்த அனத்து வசதிகளும் செய்து தரப்படும் என மருத்துவமனைகளும் சொகுசு ஓட்டல்களும் உறுதி அளிக்கின்றன. லாக்டவுன் போடப்படும் வார இறுதி நாட்களில் அதிக விருந்தினர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், திருமண நிகழ்வுகளையும் நடத்தித் தருவதாக இவை கோருகின்றன.
ஊடக அறிக்கைகளி படி, கடற்கரைகள் மூடப்பட்டுள்ள போதிலும், கடற்கரையை எதிர்நோக்கியிருக்கும் மற்றும் கடற்கரைக்கு அறுகிலிருக்கும் ஓட்டல்களில் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்காக வழங்கப்படுகின்றன.
இந்த தொகுப்பைத் தேர்வுசெய்யும் நபர்கள் வெள்ளிக்கிழமை செக்-இன் செய்து திங்களன்று செக்-அவுட் செய்யலாம். இந்த தொகுப்புகளில் செல்லப்பிராணிகளை வைத்துக்கொள்வதற்கும் வசதி செய்து தரப்படுகின்றது.
ALSO READ: முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை!
டேக்அவே இப்போது ஒரு முக்கியமான எஃப் & பி அம்சாமாக மாறியுள்ளது, இருப்பினும், உணவகங்கள் திறக்கப்பட்டபோது, அதிகமான மக்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்பினார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். உணவை எடுத்துச் செல்ல ஆவல் காட்டுவோரின் சதவீதம் 15% ஆக இருந்தது. எனினும், தற்போது இது 20% ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் COVID இரவு ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலை கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் கொரோனா தொற்று பரவும் முக்கிய இடங்களாக இருப்பதால், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கக்கூடாது என வரம்பு வைக்கப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் 50% பேரை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் நேற்று புதன்கிழமையன்று 11,681 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர், 53 பேர் இறந்தனர். சென்னையில் புதன்கிழமை 18 பேர் தொற்றின் பாதிப்பால் இறந்தனர்.
ALSO READ:சென்னை மக்களே, மாஸ்க் போடாம மாட்டிக்காதீங்க: 200 ரூபாய் அபராதம், முழு பட்டியல் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR