முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை!

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 22, 2021, 11:25 AM IST
முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை! title=

கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சுகாதாரத் துறை (Health and Family Welfare Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று (Coronavirus) பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது. 53 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் பலர் நோயின் ஆபத்தை உணராமல் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர். கொரோனா எச்சரிக்கை மற்றும் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. 

கொரோனா கட்டுப்பாடு (Covid Restrictions) விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

ALSO READ |  சென்னை மக்களே, மாஸ்க் போடாம மாட்டிக்காதீங்க: 200 ரூபாய் அபராதம், முழு பட்டியல்

இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக முதன்மை செயலாளர் சில கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதில் குறிப்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் (Face Mask) கட்டாயம் அணிய வேண்டும், தவறும் பட்சத்தில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் மட்டும் 3,750 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,073 ஆக அதிகரித்தது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 4,450 பேர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். 

ALSO READ |   முகக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு தடையின்றி அதிகரித்து வருகிறது. இதுவரை 144,417,142 பேர் கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122,878,000 பேர் மீண்டு வந்த நிலையில், இதுவரை 3,070,865 பேர் இறந்துள்ளனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News