மக்களவை தேர்தல் எதிரொலியாக TNPSC  தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வரும் 20ம் தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21ம் தேதியும் தேர்வு நடைபெறும் என TNPSC அறிவித்திருந்தது.


இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18ம் தேதி மக்களவை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதையொட்டி முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11ம் தேதியும்,  வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5ம் தேதியும், உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5ம் தேதியும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5ம் தேதியும், கணக்கு அலுவலர்கள் பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5ம் தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12ம் தேதியும் நடைபெறும்.