TN Star Candidates Lok Sabha Elections 2024 : இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை  நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. 7 கட்டமாக நடைப்பெற்ற இத்தேர்தலின் முதல் கட்டம், தமிழகத்தில் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இவர்களில் யார் யார், எந்தெந்த தாெகுதியில் முன்னணியில் இருக்கின்றனர் என்பது குறித்த முழு நிலவரத்தை இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் சென்னை:


தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்க பாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில், ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பாஜக வேட்பாளராக இந்த தொகுதியில் களம் கண்டார். இந்த தொகுதியில் தற்போது தமிழச்சி தங்க பாண்டியன் முன்னணியில் இருக்கிறார். 


வேலூர்:
வேலூரில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். இவரத்தொடர்ந்து பாஜக சாரில் ஏ.சி.சண்முகமும் அதிமுக சார்பில் பசுபதியும் போடியிட்டனர். இங்கும், திமுக கட்சியை சேர்ந்த கதிர் ஆனந்த்தான் முன்னணியில் இருக்கிறார். 


தூத்துக்குடி:


தூத்துக்குடி தொகுதியில், திமுக கட்சி சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அங்கு அவரைத்தொடர்ந்து அதிமுகவிற்காக சிவசாமி வேலுமணியும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் ஆகியோரும் போட்டியிட்டனர். தற்போதைய நிலவரப்படி கனிமொழி முன்னணியில் இருக்கிறார்.


கன்னியாகுமரி:


கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், அஇஅதிமுக சார்பில் பசிலியன் நசரத் ஆகியோரும் போட்டியிட்டனர். இங்கு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த்தான் முன்னணியில் இருக்கிறார். 


விருதுநகர்:


விருதுநகர் தொகுதியில், அதிமுக தேமுதிக கூட்டணியில் விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் போட்டியிட்டார். இவரைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக கட்சி சார்பில் ராதிக சரத்குமாரும் போட்டியிட்டனர். இதில், விஜய் பிரபாகரன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார். 


மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?


கோவை:


543 தொகுதிகள் கொண்ட கோவையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடார். அவரை தொடர்ந்து கணபதி பி.ராஜ்குமார் திமுக கட்சி சார்பில் போட்டியிடார். அஇஅதிமுக கட்சி சார்பில் ஜி.ராமச்சந்திரன் போட்டியிட்டார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைமணி ஜெகநாதன் போட்டியிட்டார். இங்கு தற்போது அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னணியில் இருக்கிறார்.


தருமபுரி:


தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சௌமியா ராமதாஸ் போட்டியிடார். இவரை தொடர்ந்து திமுக சார்பில் மணியும், அதிமுக சார்பில் ஆர்.அசோகனும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், தற்போது சவுமியா முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.


நீலகிரி:


நீலகிரி தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிட்டார். அவரைத்தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் லோகேஷ் தமிழ் செல்வனும், பாஜக கட்சி சார்பில் எல்.முருகனும் போட்டியிட்டனர். இதில், தற்போது ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார். 


மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result 2024:புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ