Tamil Nadu Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் பதினைந்து நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதட்டத்திற்குரியவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதாவது 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, அதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது என்றார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும் எனவும் சத்யபிரத சாகு கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை? 


வாக்குச்சாவடிகள் குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதட்டத்திற்குரியவை என்றும், தமிழ்நாட்டிலேயே மதுரையில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. மறுபுறம் தமிழ்நாட்டில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 39 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் தபால் வாக்குகளை பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனக் கூறினார்.


தேர்தல் பணிக்காக 190 கம்பெனி தமிழகம் வருகை


இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பணிக்காக வரவேண்டிய 165 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டனர். ஏற்கெனவே வந்த 25 கம்பெனியுடன் சேர்த்து தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட 190 கம்பெனியும் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன.


மேலும் படிக்க - பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கனிமொழி!


இதுவரை தமிழ்நாட்டில் ரூ.141 கோடி பறிமுதல்


தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடந்த மார்ச்16 ஆம் ம் தேதி முதல், நேற்று ஏப்ரல் 3 ஆம் தேதி காலை வரை ரூ.65 கோடியே 59 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 68 லட்சத்து 62ஆயிரம் மதிப்பு மதுபானங்கள், ரூ.74.41லட்சம் மதிப்பு கஞ்சா, போதைப் பொருட்கள், ரூ.59 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.14 கோடியே 87 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பு பரிசுப்பொருட்கள் என மொத்தம் ரூ.141 கோடியே 31 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


மக்களவை தேர்தல் நடைபெறும் தேர்திகள் விவரம்


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி ஆரம்பமானது மற்றும் மார்ச் 27 ஆம் தேதி 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.  வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


- முதல் கட்டம்: ஏப்ரல் 19
- இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26
- மூன்றாவது கட்டம்: மே 7
- நான்காவது கட்டம்: மே 13
- ஐந்தாவது கட்டம்: மே 20
- ஆறாவது கட்டம்: மே 25 
- ஏழாவது கட்டம்: ஜூன் 1


தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), நாம் தமிழர் கட்சி (என்டிகே) என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.


மேலும் படிக்க - லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ