Lok Sabha Elections: சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் குழு மற்றும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் சந்தித்தனர். ஜூன் நான்கு வரை ஐம்பதாயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என அவரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் செல்வம், “நாளை வாக்குப்பதிவு நடைபெற்று அதன் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் ஆணையத்தின் விதி அமலில் இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது  என்ற விதிமுறை இருப்பதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைகிறார்கள். ஆகையால் இந்த அறிவிப்பினை மறுபரிசீலினை செய்ய வேண்டும்” என கோரிக்கை மனு அளித்திருப்பதாக கூறினார்.


தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும், தற்போது கோடை காலம், பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகளவு பணத்தினை கொண்டு செல்வார்கள். இந்த விதிமுறையினால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், தேர்தல் அதிகாரியிடம் விளக்கியதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்


மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.  


மேலும் அதைத் தொடர்ந்து பேசிய சூரிய பிரகாஷ், வழக்கறிஞர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அலுவலக அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் பணியே செய்ய முடியாமல் எம்எல்ஏக்கள் மாமன்ற உறுப்பினர்கள்  தவிப்பதாகவும், இந்தப் பிரச்சனைக்கும் தேர்தல் ஆணையம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | வியர்வை சிந்தி விதைத்தவை அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்: மு.க.ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ