கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்

வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2024, 02:20 PM IST
  • வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
  • கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 3096 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ் title=

Lok Sabha elections 2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெறுகிறது. கடைசி கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். 

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு உள்பட 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. 

மார்ச் 20ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பரபரப்பான பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | வியர்வை சிந்தி விதைத்தவை அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்: மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து, நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டுவார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் கொடுப்பதை தவிர்க்க கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரை நேற்று மாலையோடு நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலர்கள்,துணை மண்டல அலுவலர்கள் தேர்தல் அதிகாரி,காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்துக்குட்பட்ட 10 முதல் 15 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர். மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

33 வாகனங்களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 430க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 3096 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக 'வெறியர்' - திடீர் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News